×

எத்தனை முறை காதல் முறிவு? நெட்டிசன் கேள்வியால் ஸ்ருதி கோபம்

சென்னை: எத்தனை முறை உங்களது காதல் முறிந்தது என நெட்டிசன் ஒருவர் கேட்டதால், ஸ்ருதிஹாசன் கோபம் அடைந்தார். கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழில் கடைசியாக லாபம் படத்தில் நடித்தார். இவர் டாட்டூ கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இதற்கு முன் நடிகர் சித்தார்த்துடன் ஸ்ருதியின் பெயர் இணைத்து கிசு கிசு கிளம்பியது. அதன் பிறகு லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்து ஸ்ருதி பிரிந்தார். இந்நிலையில் இப்போது டெல்லியை சேர்ந்த சாந்தனுவை காதலித்து வருகிறார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர், எத்தனை முறை உங்களது காதல் முறிந்தது? எத்தனை தடவை காதல் தோல்வி அடைந்தீர்கள் என ஸ்ருதியை கேட்டிருந்தார். இந்த கேள்வி ஸ்ருதிஹாசனுக்கு கோபத்தை உண்டாக்கியது. உடனே வீடியோ ஒன்றை வெளியிட்ட ஸ்ருதி, ‘உங்களுக்கு காதலி இருக்கிறாரா, கண்டிப்பாக இருக்க மாட்டார்’ என நினைக்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார். ஸ்ருதியின் இந்த கருத்தை ரசிகர்கள் சிலர் ஆதரித்தும், சிலர் விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Tags : Sruthi ,Netizen , Love, Netizen, Sruthi, Anger
× RELATED ஐதராபாத்தில் காரை அழகான கடையாக...